Wednesday, January 14, 2009

திருப்பாவை - வாழித்திருநாமம்

வாழி திருநாமம்


கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்
நீதியால் நல்ல பக்தர் வாழும் ஊர்
நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.


திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே!




இவ்வாழி திருநாமத்தின் விளக்கம்,

ஸ்ரீவில்லிபுத்தூரின் பெருமை!



கோதை பிறந்த ஊராகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிந்தனாகிய பெருமாள் வாழுகின்றான்; அவ்வாறு பெருமை வாய்ந்த அவ்வூரிலே உள்ள க்ருஹங்களில் உள்ள மணிமாடங்களில் ப்ரகாசமான விளக்குகள் ஏற்றி வைக்கப் பட்டுள்ளன; நீதியைக் கடைபிடித்தல் என்பது வைணவ சம்ப்ரதாயத்தில் ஒன்று; அவ்வாறு சிறந்த நீதியை கடை பிடிக்கும் சிறந்த பக்தர்கள் வாழும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்; நான்கு மறைகள் எனப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வ வேதங்கள் தினமும் ஓதப்படும் ஊர். வில்லிபுத்தூரில் வேதாத்யயனம் பண்ணிய பல பண்டிதர்கள் உள்ளனர். அம்மண்ணை மிதித்தாலே நம் இதற்க்கு முன் செய்த பாபங்கள், செய்துக் கொண்டிருக்கும் பாபங்கள், செய்யப் போகும் பாபங்கள் ஆகிய அனைத்தும் ஒழிந்து, பரமனாகிய நாராயணனின் திருவடியினை நாம் அடையலாம். கோதை கூறிய முப்பது திருப்பாவையையும் அறியாத மானிடரை பூதேவி சுமக்க மாட்டாள். அவ்வாறு சுமப்பது வம்பு. (ஐயைந்தும் =5x5=25 ஐந்தும் 25+5=30)


ஆண்டாளின் பெருமை!



திருவாடிப்பூர நன்னாளிலே பிறந்த கோதை வாழ்க!
திருப்பாவை முப்பதினை உலககிற்கு அளித்தவள் வாழ்க!
பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தர் கண்டெடுத்த பெண்பிள்ளை வாழ்க!
ஸ்ரீபெரும்புதூர் மாமுனி எனப்படும் உடையவரின் தங்கையாகிய ஆண்டாள் வாழ்க!
நூற்றி நாற்பத்தி மூன்று பாசுரங்கள் சொன்னவள் வாழ்க!
அரங்கனை தமக்குரியவனாக ஆக்கிக்கொண்டவலள் வாழ்க!
மல்லி என்னும் ஸ்ரீவில்லிபுத்தூர் வளம் பெற்று வாழ்க!
வன்மை பொருந்திய என்றைக்கும் இளமைத் தங்கிய நகரமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த மங்கையின் தாமரைத் திருவடிகள் என்றென்றும் வாழ்க!


அரங்கனிடத்து கைங்கர்யம் செய்யும் ஒரு மிகப் பெரிய சொல்ல ஒண்ணா மஹானுபாவரின் வலைதளத்தில் அடியாளுக்கும் திருப்பள்ளிஎழுச்சி மற்றும் திருப்பாவை ஆகியவற்றின் உரைகளை எழுத அனுமதித்த முரளி பட்டரின் பொற் பாதங்களுக்கு அடியாளின் நமஸ்காரங்களை சமர்ப்பிக்கின்றேன்..
நன்றி.
இங்ஙனம்
அடியாள்
கிருஷ்ணப்ரியா.

=====================================================================

ஸ்ரீ

Respected bAgavathAs,!

It was by the causeless mercy of Srirangam dhivyadhampathis that
aDiyEn got to write this small piece of work on thiruppAvai, which is
considered the essence of all vEdhAs. AdiyEn would love to mention
that if at all the readers see something good or interesting in it, it
is through my kAlakshEba AchAryan, Sri. U.Ve. K.B. Devarajan swAmis
krupai. Swami with all His patience helped me learn a little about the
commentaries on AndAL's thiruppAvai. I owe Him my life and more.
The credit also goes to Sri. Murali Bhattar swami, the chief priest of
Srirangam Periya Koil, who has inspired me by his simple style of
writing and also encouraged me by publishing this thiruppAvai series
on his website sriranga pankajam. It was actually for this swami that
I started writing.
I should definitely thank Sri. VAnamAmalai PadhmanAbhan swAmi, who
amidst all his busy schedule, read through the lines and helped me
correct my mistakes then and there. I bow to his concern and vast
knowledge particularly on the commentaries of our poorvAchAryA's.
To all those great srivaishnavAs who published this in their yahoo
groups and orkut communities, I am always in debt. Last but not the
least to all the readers, you encouraged me to continue and keep
moving through all the thirty pAsurams.
Let NamperumAL, by His causeless mercy bless us all with service at
His divine feet.
aDiyEn,
azhagiya maNavALa rAmAnuja dAsan
Madhusudhanan.
--
Madhusudhanan Kalaichelvan
Graduate Student,
Knowlton School of Architecture,
Ohio State University.

No comments:

Post a Comment