Monday, January 5, 2009

மார்கழி - 21ஆம் திருநாள்

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!
-ஆண்டாள்.

இத்திருப்பாவையின் உரை!

சுரந்த பாலை ஏற்றுக்கொண்ட கலங்களானவை எதிரே பொங்கி மேலே வழியும் படியாக இடைவிடாமல் பாலைச் சுரக்கின்ற பெண்களும் பேதைகளும் அணைத்துக் கொள்ளும்படி நற்சீலத்தை உடைய பெரிய பசுக்களை விசேஷமாக படைத்துள்ள நந்தகோபருக்குப் பிள்ளையானவனே! நீ திருப்பள்ளி உணர வேண்டும். அடியாரைக் காப்பதில் ச்ரத்தையுடையவனே!பெருமைப் பொருந்தியவனே! இவ்வுலகத்தில் ஆவிர்பவித்த தேஜோ ரூபியானவனே! துயில் எழாய்;உன் விஷயத்தில் தங்கள்வலிமாண்டு உபயோகம் அற்ற வலிவை உடையராய் உன் மாளிகை வாசலில் கதியற்று வந்து உன் திருவடிகளில் சரணாகதி பண்ணிக் கிடப்பதுப் போல் நாங்கள் உன்னைத் துதித்து உனக்கு மங்களாசாசனம் பண்ணிக் கொண்டு உன் திருமாளிகை வாசலில் வந்து சேர்ந்தோம்;


அடியாள்
கிருஷ்ணப்ரியா
krishna priya

Song: 21

The Divine Recommendation:

Sri Nappinnai wins the battle and moves forward to open th door and explains to them Her situation of waiting for the right time to talk about them to Sri KrishNA and there by grant them their reward of service. Hearing these words of Sri ~Nappinnai, the gOpikA's start singing about Sri KrishNA.

SwApadEsam:

She first speaks about the wealth of Sri ~Na~NdhagOpAlA and plaeds KrishNA that He understand their situation. Sri Kanchi swAmi has shown a very enjoyable swApadEsam here.SwAmi compares the cattle wealth of ~Na~ndhagOpAlA to that of the sishyAs of swAmi emperumAnAr. Similar to those cattle's that can fill vessels after vessels with milk, the ardent devotees of swAmi, with their impeccable knowledge could shower their grace on us. So ARRapaDaithAn is swami EmperumAnAr and His "magan" is Thiru~NArAyana perumAL of MelkOTE. SwAmi concluded that this is a ma~ngalAsAsanam for MElkOTE perumAL.

The Description:

The special phrase to be noted in this pAsuram is, "OoRRamuDayAi, periyAi, ulaginil thORamAi niRa chuDarE". The unshakable OORam that Sri krishNA has is that at any cost He will never leave his devotees who have surrendered to Him. The best of the example being His causeless mercy on Sri VibeeshNAzhwAn. Next, AnDAL titles Him "periyAi" which means His greatness is best exhibited when, even after doing everything for His devotees, He thinks He has done His duty and not anything great as such. She then names Him "ulaginil thORamAi ~ninRa chudar", though the scriptures hail you so much explaining your greatness, you came down as Sri RAmA and Sri KrishNA and showed your mercy on us who have done everything but good deed. The "chuDar" that AnDAL is talking here is about His guNam to serve His devotees forgetting His greatness.

"pORiyAm vandhOm pugazha~ndhu"

No comments:

Post a Comment