Thursday, January 1, 2009

மார்கழி - 18ஆம் திருநாள்

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
-ஆண்டாள்


இத்திருப்பவையின் உரை!


(முன் பாசுரத்தில் நந்தகோபருடைய திருமாளிகையில் எழுப்பி, கண்ணன் வரவில்லை என்று தெரிந்த கோதையும் அவளது தோழிமார்களும் அடுத்து ராதையாகிய நப்பின்னையின் திருமாளிகில் தான் கண்ணன் இருப்பான் என்று எண்ணி அவள் மாளிகைக்குச் சென்று இப்பாசுரத்தை பாடுகின்றார்கள்)



தன்னால் வென்று தள்ளப் படுகின்ற மத யானைகளை உடையவனும், போர் களத்தில் முதுகு காட்டி ஓடாத புஜபலத்தை உடைவனுமான நந்தகோபாலனுக்கு மருமகளாய் இருக்கின்ற நப்பினை பிராட்டியே! பரிமளம் வீசா நின்றுள்ள கூந்தலை உடையவளே! தாழ்ப்பாளைத் திறந்திடு; கோழிகளானவை எல்லா இடங்களிலும் பரவி கூவுகின்றது பார். அன்றியும் குருக்கத்தி கொடிகளால் ஆகிய பந்தலின் மேல் உறங்குகின்ற குயிலினங்கள் பல முறை கூவியதைக் காண்; கிருஷ்ணனோடு விளையாடுகைக்கு உபகரணமான பந்து பொருந்திய கைகளை உடையவளே! உனது கணவனாகிய கண்ணபிரானுடைய திருநாமங்களை நாங்கள் பாடும் படியாக சீர்மைப் பொருந்திய உன் கைவிரல்களை ஒலிக்கும் படி நடந்து வந்து செந்தாமரைப் பூ போன்ற உன் கையினால் வளையல்கள் அணிந்திருக்கும் சப்தம் கேட்க்கும் படி எங்கள் மீது மகிழ்ச்சிக் கொண்டு தாழ்ப்பாளைத் திறந்தாயானால் மகிழ்ச்சி அடைவோம்.


அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)


Song :18

Introduction:

This is a very important pAsuram. Even after waking up ~Na~ndhagOpA, yasOdhA and BalarAmA, Sri KrishNA does not seem to open His eyes and grant them what they have requested Him for. Only then they realize that have committed a mistake of not taking up the recommendation of Sri ~Nappi~nnai pirATTi. So they do it in this song.

The inevitable recommendation:

As we have committed a lot of sins and also for the fact that the Lord can always be independent to take His own decision and act according to His will and wish. These conditions makes it mandatory to reach Him through someone who is more close and dear to Him. On the same grounds, Sri ~Nappi~nnai pirAtti's intervention becomes ideal here.

The In laws Greatness:

AnDAL refers to Her as the daughter in law of Sri ~Na~ndhagOpA. Similar to SeethA pirATTi, who declares Herself as, dasarathA's daughter in law and only then janakA's daughter. AnDAL gives a clear figure of a typical Indian household women, who should value and weigh their husbands family more than Her own fathers house.
So AnDAL gives out the need and greatness of purushakAram, that is thAyAr's recommendation in this pAsuram.

Sri RamAnuja's involvement with thiruppAvai:

Sri RamAnujA had special respect and love towards thiruppAvai, that He use to chant it out when He goes around for taking alms in the thiruveedhi's of Srirangam. Once in such an occasion He walked near His AchAryan Sri Periya ~Nambi's house chanting this particular pAsuram. SwAmi was too much involved into the pAsuram that when the doors of that house were opend by Sri Periya ~Nambi's daughter AththuzhAi clinging her bangles, swAmi considered her to be Sri ~Nappinnai pirATTi being sung in that pAsuram saying, "pa~ndhAr virali un maithunan pEr pADa, se~nthAmarikkaiyAl seerAr valai olippa" and fell at Her feet and prostrated. Such was Sri RamAnujA's involvement with thiruppAvai.



"va~ndhu thiravAi magizh~ndhu"


--
Madhusudhanan Kalaichelvan
Graduate Student,
Knowlton School of Architecture,
Ohio State University.

No comments:

Post a Comment