Wednesday, January 7, 2009

மார்கழி - 24ஆம் திருநாள்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திரல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!
-ஆண்டாள்

இத்திருப்பவையின் உரை!


அன்று மகாபலி சக்கரவர்த்திக்கு அறிவு புகுட்ட வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக மாறி முன்று உலகங்களையும் அளந்தாய்; உன்னுடைய அந்த திருவடிகள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவென போற்றுகின்றோம்; சீதா பிராட்டியைக் களவு கண்ட இராவணன் இருக்கும் இடத்தில் எழுந்தருளி அவனுடைய அழகிய பட்டணமான லங்காபுரியை அழித்தருளியவனே! உன்னுடைய மிடுக்கு பல்லாண்டு வாழ்கவென போற்றுகின்றோம்;சகடாசுரன் அழியும் படி சகடத்தை உதைத்தவனே! உன்னுடைய கீர்த்தியானது போற்றி;கன்றாய் நின்ற வத்சாசுரனை எறிதடியாகக் கொண்டு கபித்தாசுரன் மீது எறிந்தவனே! உன்னுடைய திருவடிகள் போற்றி; அன்று ஆயர்களுக்காக கோவர்த்தன மலையை குடையாய் பிடித்துக் காத்தவனே! உன்னுடைய சௌசீல்ய சௌலப்யாதி குணங்கள் போற்றி; பகைவரை ஜபித்து த்வேஷத்தை அழிக்கின்ற உனது திருக்கையில் உள்ள வேல் வாழ்கவென போற்றுகின்றோம்; என்று இப்படி பலவாறாக மங்களாசாசனம் செய்து கொண்டு, உன்னுடைய வீர்யங்களையே புகழ்ந்து கொண்டு, அடியோம் இப்போது பறை கொள்வதற்காக உன்னிடம் விடைக் கொண்டோம். கிருபை செய்தருள்.


அடியாள்
கிருஷ்ணப்ரியா
krishna priya

.
Song :24

Introduction:

Finally approving their request to walk a few feet for the gOpikA's to enjoy, He walked out of the room and sat on His royal throne. This attitude that EmperumAN had towards His favourite gopikA's, working out such requests, is compared to His simplicity in driving ArjunA's chariot to his bet and call in the KurukshEthra war. Hearing their plea, KrishNA walks from His bed to His throne and seeing that all the gOpikA's with Sri ~Nappinnai followed Him singing praises to wade of evil eyes, which will definitely be casted seeing such a majestic walk. The commentator says that once He occupied the throne, the gOpikA's started pressing His tender feet to wade Him of the pain of walking that little distance owing to their request. Now the feet turn red due to the strain by walk and their hands pressing them.

The Mighty Deeds:

This immediately reminds AnDAL of Sri KrishNA's heroic deed of measuring the whole universe in two steps with these very tender feet. She feels they have made Him strain Himself by making Him walk, very similar to the dEvA's, forgetting His tender nature. AnDAL sings glory to the care that He takes on people who come to Him for refugee explaining the holy story of Sri VAmanA.

She moves on to another similar episode where Sri KrishNA helped the dEvA's again from rAvanA. He walked the full length of India, crossing the oceans fought with rAvanA, with an ease of entering a cave with all might and fighting a wild beast.

AnDAL says, "Forget all these episodes. What still amazes us is the way you dealt with the asurA who entered the cart under which you were sleeping as an infant, not knowing what is good and bad. We fear for all that."

Furthermore AnDAL sings KrishNA's deed in managing the asurAs who came in disguise as a calf and fruit. Than these issues, what fascinates AnDAL is Sri KrishNA's help to the entire cowherd clan of saving them from pouring rain when He lifted the gOvardhanam and held it in His little hands.

Father and Daughter:

Though AnDAL's moto was to sings the heroic deeds of Sri Krishna, we see her sing about Sri VAmanA, Sri RAma etc. As such they are all His previous incarnations . These lines reminds us of Her own divine father Sri PeriyAzhwAr's were He sings, "varuga varuga i~gE, vAmana ~nambi varugavingE, kariya kuzhal kAguththa ~nambi varuga ingE".

"inRu yAm va~ndhOm iRa~ggu"
--
Madhusudhanan Kalaichelvan
Graduate Student,
Knowlton School of Architecture,
Ohio State University.

No comments:

Post a Comment