Showing posts with label Thirupalliezhuchi. Show all posts
Showing posts with label Thirupalliezhuchi. Show all posts

Tuesday, December 23, 2008

மார்கழி - 9ஆம் திருநாள்

திருப்பள்ளியெழுச்சி

கடி மலர் கமலங்கள் மலர்ந்தனன் இவையோ
கதிரவன் கனைக்கடல் முளைத்தனன் இவனோ
துடியிடையார் சுரிக்குழல் பிழிந்துதறித்
துகிலோடு தேறினார் சூழ்புனல் அரங்கா
தொடையுற்ற துளவமும் கூடையும் பொலிந்து
தோன்றிய தோள் தொண்டரடிப்போடிஎன்னும்
* அடியனை அளியனென்று அருளி உன் அடியார்க்கு
ஆட்பாடுத்தாய் பள்ளி எழுந்தருளாயே!

-தொண்டரடிப்பொடி ஆழ்வார்

கடி - வாசனை



இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை



திருக்காவிரி தீர்த்தத்தாலே சூழ்ந்து உள்ள ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கத்தில் கண்வளர்ந்து அருளாமவனே! பரிமலமுடைய தமரைப்பூக்கலானவை மலர்ந்து விட்டன; சூரியனானவன், கோஷஞ் செய்கையையே இயல்பாக கொண்ட கடலின் உதயகிரியிலே தின்றினான்; உடுக்கைப் போன்ற இடை உடைய மாதர் தமது சுருண்ட முடியை நீர் பசியாற பிழிந்து உதறி விட்டுகே கொண்டு தம் தம் ஆடைகளை உடுத்திக் கொண்டு கரைஏரிவிட்டார்கள்; ஒழுங்காக தொடுக்கப்பெற்ற திருத்துழாய் மாலையையும் பூக்குடலையும் விளங்கா நிர்கப்பெற்ற தோளையுடைய தொண்டரடிப்பொடி என்ற பெயருடைய தாசனை 'திருவுள்ளம் பண்ணுகைக்கு உரிய பாத்திரம்' என்று திருவுள்ளம் பற்றி அங்கிஇகரித்து அருளி தேவரீருடைய நித்யகிங்கரர்களான பதவிக்கு ஆளாக்க வேண்டும்.

திருப்பள்ளிஎழுச்சி மற்றும் அதன் உரை முற்றிற்று.
இதோடு நிற்காமல் மேலும் திருப்பாவையில் ஆண்டாளுடன் சிந்திப்போம்
அரங்கன் திருவடிகளே சரணம்

நம்பெருமாள் திருவடிகளை பற்றிய


அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)

திருப்பாவை

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

-ஆண்டாள்-

இத்திருப்பாவையின் உரை!



தூய மணிகளை உடைய, இருள் புக முடியாவண்ணம் சுற்றிலும் விளக்குகள் வைத்துக்கொண்டு, அவற்றில் போட்டுள்ள தூபம் வாசல் வரையில் கமழும் அளவிற்கு வைத்துக்கொண்டு உறங்கும் என் அருமை மாமன் மகளே, நீ விழித்துக்கொள். என் மாமன் பத்தினியான மாமியே யாம் இவ்வளவு கூறியும் விழித்திராத உன் மகள் ஊமையோ? செவிடோ? கண்ணனால் மந்திரபடுத்தப்பட்டாளோ? நேற்று இரவு சலங்கை ஒலி கேட்டதே. கண்ணனும் உன் மகளும் இரவு அடிப் பாடி கலைத்து இராவு முழுவதும் உறங்காமல் இப்பொழுது தான் உறங்குகின்றலோ உன் மகள். அவளை அனுப்பு சாக்ஷாத் வைகுண்டபதியான ஸ்ரீமன் நாராயணனே இப்பொழுது மதுசூதனனாக அவதரித்துள்ளான். அவனின் பெருமையை நாம் பாடிப் பரவசமும் பெருமையும் புண்ணியமும் அடைவோமாக.


அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)


============

Song: 9

Owner and His Property:

The girl woken up in this song is one with unintimidated belief that Lord alone is the means to Liberation. When HanumAn meets SeethA pirATTi at LankA and suggested that He carries Her back to RAmA. PirATTi refused it immediately and said that by doing that HanumAn would have done something similar to rAvanA. Just that rAvana robbed SeethA, an important possession of RAmA from Him but HanumAn is robbing the Lord of His divine quality of "sarva lOka rakshakatvam", i.e., His sole right to protect all. Further She says, "Your burning tail was cooled by my chastity and with that I could have saved me myself. But by doing that I would have only spoilt RamA's reputation. He alone by His power should rescue me and establish by His valiance." She said, "tat tasya sadrusam bhavEt", that alone would be befitting Him. HanumAn was awestruck by this reply and hailed PirATTi.
On similar lines to SeethA pirATTi, this girl had utmost faith on the Lord and having transfered her burden on Him, was enjoying a sound sleep. This is how a soul after surrendering to Sriman NArAyanA should behave. The utmost faith that the owner will take care of His property is what every single soul should exhibit.

Celestial Relationship:

AnDAL refers to this gOpikA as, "mAmAn magaLE", i.e., Her uncles daughter. Though they do not have actual blood relationship, She is referring to the relation that their inner souls are enjoying as devotees of the Lord. Generally blood relationships are condemend by our AchAryAs as they bring with them material interest and worldly attachments. But on the other hand, they welcomed it if such relations help in serving the Lord and His devotees. SwAmi NammAzhwAr blesses us to live with reations, earn a rich living etc in ThiruvAimozhi (8.10.11). Immediately in the next decade(9.1.1) He condemns it for the above said reasons. KoorathAzhwAn used to feel for not having a blood relation with SwAmi RamAnujA unlike MudhaliyAndAn or EmbAr.

Contradicting Qualities Together:

Further AnDAL coins a phrase with three important names of EmperumAn. She calls him "mAmAyan mAdhavan vaikundhan". In this the first name "mAmAyan", refers to the simpleness of EmperumAn when He came down as KrishnA to play childish tricks, steal butter and get along with us like one amongst us. The third name "vaikundhan" refers to His greatness as the ultimate power, owner of the universe and ruling it sitting at His eternal abode the Srivaikuntam. The former quality is called "sowlabhyam" and the latter as "parathvam". It has always been a constant question to AzhwArs as to how EmperumAn alone could incorporate both these qualities together as they are mutually contradicting. AnDAL interestingly used the term "mAdhavan" in between the other two. "MAdhavan" means the one in whose possession is Madhavi, i.e., Sri MahAlakshmi. Or in other words, it is because of PirATTi's uninterrupted presence with Him, these two otherwise mutually contradicting qualities are present in Him.


"~nAmam palavum navinRu"




--
Madhusudhanan Kalaichelvan
Graduate Student,
Knowlton School of Architecture,
Ohio State University.

மார்கழி - 8ஆம் திருநாள்

திருப்பள்ளியெழுச்சி

ஏதமில் தண்ணுமை எக்கம்மத்தளி
யாழ்குழல் முழவமோடு இசை திசை கெழுமி
கீதங்கள் பாடினர் கின்னரர் கருடர்கள்
கந்தர்வர்வர் கங்குலுள் எல்லாம்
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்
சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவன்
ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள
அரங்கத்தம்மா பளிய் எழுந்தருளாயே!
-தொண்டரடிப்பொடி ஆழ்வார்
ஏதம் இல் - ஏதம் (குற்றம்) இல்லா
(முற்று பெறாத சொல்)

இத்திருப்பள்ளி எழுச்சியின் உரை

குற்றமற்ற சிறுபரையும், ஒற்றைத் தந்தி உடைய வாத்தியமும் மத்தளமும், வீணையும், புல்லாங்குழல்களுமாய் திக்குகள் எங்கும் இவைகளின் முழக்கத்தோடு பட்டு பாட கடவரான கின்னரர்களும், கருடர்களும், கந்தர்வர்களும் மற்றவர்களும் தேவர்களும், மஹரிஷிக்களும் சாரணர்களும், யக்ஷர்களும், சித்தர்களும் தேவரீர்களுடைய திருவடிகளை வணங்குவதற்காக இரவெல்லாம் மோஹம் உற்றனர். ஆகையாலே அவர்களுக்கு பகலிலே காட்சி அருள்வதற்காக அரங்கத்தம்மா நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

அடியாள்
கிருஷ்ணப்ரியா
(nampeurmal_srirangam@yahoo.com)

திருப்பாவை

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு
மேய்வான் பறந்தன கான் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!
-ஆண்டாள்.



இத்திருப்பவையின் உரை!


கிருஷ்ணனாலே மிகவும் விருமபத்தக்கப் புதுமை போன்றவளே! கீழ்திசைப்பக்கத்து ஆகசமானது வெளுத்தது; அன்றியும் எருமைகளானவை பனிப்புல் மேய்க்கைக்காக சிறு தோட்டங்களில் சென்று புக்கன திருவேங்கட யாத்திரை போலே போகையயே பிரயோஜனமாகக் கொண்டு போகின்ற மற்றுமுள்ள எல்லாப்பெண் பிள்ளைகளையும் போக ஒட்டாமல் தடுத்து உன்னை அழைத்தர்போருட்டு உன் மாளிகை வாசலில் வந்திர நின்றோம். எங்களுடன் கூடுவத்தர்க்காக எழுந்திரு; கண்ணபிரானுடைய குணங்களைப் பாடி அவனிடத்து பறையைப் பெற்று, குதிரை உருவம் எடுத்து வந்த கேசிஎன்னும் அசுரனுடைய வாயைக் கீண்டேரிந்தவனும் மலர்களை மாளச் செய்தவனுமான அத்தேவாதி தேவனை நாம் அணுகி அடிபணிந்தால் அவன், நமது குறைகளை ஆராய்ந்து இறங்கி அருள்வான்;

அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)


============
Song :8

The most Special Girl:

The girl who is being woken up in this pAsuram is a special one. In fact she is very close to EmperumAn, or probably a devotee deeply in love with Krishna. Our AchAryAs compared her to SwAmi NammAzhwAr, rightly called as "krishna-trishnA thathvam", an embodiment of true love and perfect devotion towards KrishnA. Such a devotee's company is desirable to one and all. Hence AnDAL requests this particular gOpikA to join their group so that all of them are benefited. She refers to her as "kOdhugalamuDaya pAvAi", the special maiden.

Is that the sunrise ?

As usual they explain to her the signs of dawn. "The horizon on the east is becoming bright. Get up." and she replied, "It is the glow and lust from your moon-like faces which has brightened the horizon. Its not dawn actually."(one should remembre the phrase "thingaL thirumugathu sEyizhayAr" that AnDAL uses to describe these little girls)

Perfect Imitation of the Character Played:

Now these girls explain to the sleeping one the second sign of sunrise. Its an interesting phrase where AnDAL mentions about the buffaloes being dispersed to graze dew clad grass in the early morning hours. Its a technical issue about how the cowherds disperse their cattle to graze in a restricted zone and how is that AnDAL, a brahmin by birth knew this? The commentator says AnDAL is so much into Her character as a gOpikA and She has understood this, and more technical issues about the cowherds and their practice. She got to know their daily chores and habits. Further She persuades the sleeping girl by saying that if we delay Krishna might also leave behind the cattle to help them graze and there are chances we might miss Him.

Divine Relations:

Its something similar to Her father Sri PeriyAzhwAr who enjoyed all the childish pranks of Krishna considering Himself to be YasOdhA. Being a learned vEdic scholar and authoring a book titled "kalpasoothrA", didn't stop Him from enjoying those acts of the Lord. AnDAL refers to Him as "bhOgaththil vazhuvAdhA pudhuvayarkOn", He who never misses a single opportunity to enjoy Krishna's childish play. She has done the same thing here.

Conclusion:

Considering these issues, SwAmi PiLLai lOkAchArya in Sri vachanabooshanam says, "periyAhzwArum thirumagaLArum gOpa janmaththai AsthAnam panninArgaL". This means Sri PeriyAzhwAr and His daughter took appropriate roles of cowherds to enjoy Krishna and His plays. So it becomes evident that any role which is compatible for enjoying and serving the Lord is desirable for us.

"AvAvenRArAi~ndhu aruL"
--
Madhusudhanan Kalaichelvan
Graduate Student,
Knowlton School of Architecture,
Ohio State University.

Saturday, December 20, 2008

மார்கழி - ஆறாம் திருநாள்

திருப்பள்ளியெழுச்சி


இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ
இறையவர் பதினோரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் ஆறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி
புரவியொடு ஆடலும் பாடலும் தேரும்
குமார தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்
அருவரையனை நின் கோயில் முன்னிவரோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
-தொண்டரடிப்பொடி ஆழ்வார்



இரவியர் - பன்னிரண்டு தேவர்களும்
பதினோரு விடையர் - ஏகாதச ருத்ரர்கள்
மயிலினன் - மயில்வாஹனன்
மருதர் - மருதகணங்களான ஒன்பது பேர்
வசுக்கள் - அஷ்ட வசுக்கள்


இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை



விலக்ஷணமாய் பெரிதான தேரோடு பன்னிரண்டு ஆதித்தர்களும் ஜகத்துக்கு நிர்வாகர்களான ஏகாதச ருத்ரர்களும் பொருந்திய மயில் வாகனம் உடைய சுப்ரமணியனும் மருதகனங்களும் அஷ்டவசுக்களும் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு வந்து நெருங்கி நிற்க, பாட்டும் கூத்துமாய் தேவசேனா சமூகங்கள் வந்து புகுந்த பின் நெருங்கி நின்ற கூட்டமானது மலையைப் போல் கட்சி அளித்தது. ஆகவே இவர்களை நோக்க அரங்கத்தம்மா நீ பள்ளி எழுந்தருள்வாயாக!


அடியாள்
கிருஷ்ணப்ரியா
(nampeurmal_srirangam@yahoo.com)

திருப்பாவை

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
-ஆண்டாள்

புள் - பறவை.
அரையன் - தலைவன்.
அரவம் - ஒலி..
இத்திருப்பாவையின் உரை!


பறவைகளும் இரை தேடுகைக்காக எழுந்து ஆரவாரங்கள் செய்கின்றன; பரவித் தலைவனான பெரிய திருவடியாகிய கருடனுக்கு ஸ்வாமியான சர்வேஷ்வரனுடைய சந்நிதியில் வெண்மைநிறமுடையதும் அனைவரையும் அழிய நிற்பதுமான சங்கினுடைய பேரொளியையும் செவிப்படுத்துகின்றில்லையோ?
பகவத் விஷயரசம் அறியப்படாத பெண்ணே! எழுந்திரு; பூதனையின் மூலையில் தடவிக்கிடந்த விஷத்தை அவளது ஆவியுடன் அமுது செய்து வஞ்சனை பொருந்திய அசுர விஷ்டமான சகடமானது கட்டுக் குழையும் படி திருவடியை ஓங்கச் செய்தவனும் திருப்பாற்கடலில் திருஅனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்து அருளின ஜகத்கார பூதனுமான எம்பெருமானை ரிஷிகளும் யோக பயிற்சியில் ஊன்றினவரும் தமது ஹ்ருதயத்தில் அமர்த்திக்கொண்டு ஹ்ருதயஸ்தனான அவ்வெம்பெருமான் அசையாத படி சாவதாநமாக எழுந்து 'ஹரிர் ஹரி' என்ற பேரொலியானது எமது நெஞ்சில் புகுந்து குளிர்ந்தது.

நாமும் சென்று அந்த ஹரியை தொழுவம். ஏ தோழி நீ உறங்கலாகது.

அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)

---------

Song 6:

Birds chant His names too:

The girls approach the house of the first gOpika to be woken up. They tell her about the birds chirping, indicating the early dawn hours and ask her to wake and join them. The gOpikA rejects their reason and says, " you girls never allow the birds in your town to sleep, neither do you sleep. You keep chanting BhagavAns name all night long and they have learned to do the same. So I cant take this as a sign of dawn."

Naming to attain bliss:

Then they mention the divine sound of the conch being played at the "puLLarayan kOil", the temple of Sriman NarAyana, indicating the early morning worship and inviting devotees for His service. The phrase " puLLarayan kOil" is an intersting usage here. The meaning is puL= garuDa, arayan= king, i.e., the king of garuDa, none other than Sriman NarAyana, kOil= temple. That is Sriman NarAyanA's temple. But why is that AnDAL uses such an ambage here. The commentator gives a very interesting reply here. In RamAyanA when SeethA pirATTi explains Her abduction by RAvAnA to HanumAn, she says, "....I was separated from Rama's younger brother and LakshmanA's elder brother on that fateful day...." (rAmAnujam lakshmana poorvajamcha:) Such usage is for an interesting reason that the Lord feels hapy when His divine name is coupled with His devotee and so does the devotee. So AnDAL made this excellent usage of "puL arayan kOil", referring to the Lord through His ardent devotee GaruDa.

Don disturb the Lord:

The next interesting phrase is "uLLaththukkonDu munivargaLum yOgigaLum mellayezhundhu". AnDAL sings about the ascetics, who are in the habit of waking up slowly from their
beds. This, they are in practice so that they don't disturb the Lord, who has taken an eternal abode in their heart if they wake up in haste. PrahlAdhA, when pushed down from the
mountain caught His heart firmly so that the Lord residing inside is not disturbed by the fall. The Lord wanted to help such devotee and was waiting to receive him in the bottom of the mountain with His arms spread.

Sing His name aloud:

AnDAL finishes this pAsuram with another important note, "hari enRa pErravam". We should be in the habit of chanting HARI's divine names when we wake up to cleanse us from the sins committed that night unknowingly in our sleep. It was for this reason that our poorvAchArya made this compulsory that we chant His names aloud when we wake up from bed.

"uLLam pugundhu kulirndhu"


--
Madhusudhanan Kalaichelvan
Graduate Student,
Knowlton School of Architecture,
Ohio State University.

Friday, December 19, 2008

மார்கழி - 5ஆம் திருநாள்

திருப்பள்ளியெழுச்சி

புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனைகடல் அரவம்
களிவண்டும் இழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலன்தொடையல் கொண்டடியினைப் பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலாங்கையர்கோண் வழிபாடு செய்கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
- தொண்டரடிப்பொடி ஆழ்வார்


புட்கள் - பறவைகள்
கங்குல் - இரவு
புலரி - காலை, விடியல்நேரம்
குணதிசை - கிழ்க்கு திசை
அமரர்கள் - தேவர்கள்

இத்திருபள்ளிஎழுச்சியின் உரை!


பூத்திராநின்ற சோலையிலுள்ள பறவைகள் ஆரவாரம் செய்யா நின்றது; இரவானது கழிந்து காலைப் பொழுது வந்துவிட்டது. கிஇழ் திசையில் கோஷஞ்செய்யக்கூடிய கடலினுடைய ஓசையானது வியாபித்தது; தேனைப் பருகிக் களிக்கின்ற வண்டுகளானவை சப்தியாநின்றன; பலவகைப் பூக்களாலே தொடுக்கப்பட்ட அழகிய அலங்கல் மாலைகளை ஏந்திக்கொண்டு தேவர்கள் தேவரீருடைய திருவடிகளில் பணிமாறுகைக்காக வந்து நின்றார்கள்; ஆகையாலே சர்வ ஸ்வாமின்! லங்கேஷ்வரனான விபீஷணழ்வன் தாஸவ்ருத்தி பண்ணப்பெற்ற கோயில் எம்பெருமானே நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம்செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!
- ஆண்டாள்
மாயன் - மாயச் செயல்கள் செய்பவன்
துறைவன் - நிருபமாக உடையவன்.
குடல் - வயிற்றுப் பகுதி.
செப்புதல் - சொல்லுதல்.

இத்திருப்பவையின் உரை!

மாயச் செயல்களைச் உடையவனும் வடமதுரைக்குத் தலைவனும், பரிசுத்தமாய் ஆழம் மிக்கிருக்கிற தீர்த்தத்தை உடைய யமுனை ஆற்றங்கரையை நிரூபமாக உடையவனும், தாயாகிய தேவகி பிராட்டியின் வயிற்றை விளங்கச் செய்தவனுமான கண்ணபிரானை நாம் பரிசுத்தியுள்ளவர்களாய்க் கிட்டி நல்ல மலர்களைத் தூவி வணங்கி வாயாரப்பாடி நெஞ்சார தியானம் பண்ண, அதன் பிறகு சேஷ சேஷிபாவ ஞானமுண்டாவதற்கு நாம் முண்பது செய்த பாவங்களும், செய்துகொண்டிருக்கும் பாவங்களும், செய்யப்போகும் பாவங்களும் தீயிலிட்ட பஞ்சு போல் உருமாய்ந்து போகும்; ஆகையாலே அவ்வெம்பெருமான் திருநாமங்களைச் சொல்.

அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)

Song 5:

On hearing AnDAL's invitation to attend the vow, a big group of gOpikAs assemble to enjoy company mutually. One among them raised a doubt, "When we do all this to get to enjoy the company of Krishna, we should not forget that we have done enough sins that will pose barricades in our path to salvation." Further on she goes over to explain the story of how much of plans and preparations Dasaratha made for Rama's coronation, with his kula guru, maharishi Vasishta fixing the date, with the whole city of AyOdhyA singing in bliss and finally question, "But Rama went to forests forsaking the city and His PdhukA's decorated the royal throne and reigned for fourteen long years. So what is the surety that we will succeed our mission?"
AnDAL sings this pAsuram as a reply to that question. You will be freed of all your obstacles just by reciting His divine names, having your thoughts always filled by Him and offering flowers to His lotus feet. By doing these simple deeds, all your sins committed before your surrender at His lotus feet and those committed inadvertently after it will all perish. Just that your sins committed prior to your surrender will be burnt to ashes and those done after it will not stick on to you, like water droplets on a lotus leaf.
EmperumAn can be compared with milk, as its both a pleasurable food and also a medicine to cure bile. AzhwAr rightly calls him, maruththuvanAi ninRa mAmanivanna.
"theeyinil dhoosAgum seppu"

--
Madhusudhanan Kalaichelvan
Graduate Student,
Knowlton School of Architecture,
Ohio State University.

Thursday, December 18, 2008

மார்கழி - 4ஆம் திருநாள்

திருப்பள்ளியெழுச்சி

மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய விசை திசை பறந்தன வயலுள்
இரிந்தன சுரும்பின மிலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய வடுதிறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
-தொண்டரடிப்பொடி ஆழ்வார்
விடை - எருது
இரிந்த - ஆரவாரம்
மாமுனி - விஷ்வாமித்ரர்
வேள்வி - யாகம்
அயோத்தி அரசன் - இராமன்
இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை!


உயர்த்தியும், இளமையும் தங்கிய இடையர் ஊதுகின்ற
புல்லாங்குழலின் நாதமும், எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியினுடைய ஓசையும் இவ்விரண்டும் கூடின த்வநியானது திக்குகள் எங்கும் பரவி விட்டது;
கழனிகளில் உள்ள வண்டுகளின் திரள் ஆரவாரித்துக்கொண்டு கிளம்பின; ராக்ஷச குலத்தை உருவழித்த தேவாதிதேவனே! விஸ்வாமித்ரா மஹரிஷியின் யாகத்தை நிறைவேற்றுவித்து அவப்த்ருத ஸ்நானம் செய்வித்து அருளின, விரோதிகளை ஒழிக்கவல்ல மிடுக்கை உடையனாய் அயோத்யா புரியை ஆளுகையலே எங்களுடைய ஸ்வாமியான அரங்கத்தம்மா நீ பள்ளிஎழுந்தருள்வாயாக

அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)
திருப்பள்ளியெழுச்சி

மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய விசை திசை பறந்தன வயலுள்
இரிந்தன சுரும்பின மிலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய வடுதிறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
-தொண்டரடிப்பொடி ஆழ்வார்
விடை - எருது
இரிந்த - ஆரவாரம்
மாமுனி - விஷ்வாமித்ரர்
வேள்வி - யாகம்
அயோத்தி அரசன் - இராமன்
இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை!


உயர்த்தியும், இளமையும் தங்கிய இடையர் ஊதுகின்ற
புல்லாங்குழலின் நாதமும், எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியினுடைய ஓசையும் இவ்விரண்டும் கூடின த்வநியானது திக்குகள் எங்கும் பரவி விட்டது;
கழனிகளில் உள்ள வண்டுகளின் திரள் ஆரவாரித்துக்கொண்டு கிளம்பின; ராக்ஷச குலத்தை உருவழித்த தேவாதிதேவனே! விஸ்வாமித்ரா மஹரிஷியின் யாகத்தை நிறைவேற்றுவித்து அவப்த்ருத ஸ்நானம் செய்வித்து அருளின, விரோதிகளை ஒழிக்கவல்ல மிடுக்கை உடையனாய் அயோத்யா புரியை ஆளுகையலே எங்களுடைய ஸ்வாமியான அரங்கத்தம்மா நீ பள்ளிஎழுந்தருள்வாயாக

அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)
திருப்பள்ளியெழுச்சி

மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய விசை திசை பறந்தன வயலுள்
இரிந்தன சுரும்பின மிலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய வடுதிறல் அயோத்தி எம் அரசே!
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!
-தொண்டரடிப்பொடி ஆழ்வார்
விடை - எருது
இரிந்த - ஆரவாரம்
மாமுனி - விஷ்வாமித்ரர்
வேள்வி - யாகம்
அயோத்தி அரசன் - இராமன்
இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை!


உயர்த்தியும், இளமையும் தங்கிய இடையர் ஊதுகின்ற
புல்லாங்குழலின் நாதமும், எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணியினுடைய ஓசையும் இவ்விரண்டும் கூடின த்வநியானது திக்குகள் எங்கும் பரவி விட்டது;
கழனிகளில் உள்ள வண்டுகளின் திரள் ஆரவாரித்துக்கொண்டு கிளம்பின; ராக்ஷச குலத்தை உருவழித்த தேவாதிதேவனே! விஸ்வாமித்ரா மஹரிஷியின் யாகத்தை நிறைவேற்றுவித்து அவப்த்ருத ஸ்நானம் செய்வித்து அருளின, விரோதிகளை ஒழிக்கவல்ல மிடுக்கை உடையனாய் அயோத்யா புரியை ஆளுகையலே எங்களுடைய ஸ்வாமியான அரங்கத்தம்மா நீ பள்ளிஎழுந்தருள்வாயாக

அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)

திருப்பாவை

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகர்ந்து கொடு ஆர்த்து ஏறி
உழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து
பாழியன் தோளுடை பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!
-ஆண்டாள்.
கரவேல் - கையில் ஏந்திய வேல்.
ஆழியுள் புக்கு - கடலில் புகுந்து.
ஆர்த்து - கர்ஜனை.

இத்திருப்பவையின் உரை:

மண்டல வர்ஷத்துக்கு தலைவனான பர்ஜன்யனே! நீ உன்னுடைய கோடையில் ஒன்றையும் ஒளியது ஒழிய வேண்டும்; நீ செய்யவேண்டிய பணி என்னவென்றால், கடலினுள் புகுந்து அங்குள்ள நீரை மொண்டு கொண்டு வந்து, கர்ஜனை செய்து ஆகாயத்தே ஏறி காலம் முதலிய ஸகல பதார்த்தங்களுக்கும் காரண பூதனான எம்பெருமானுடைய திருமேனி போல் உனது திருமேனியில் கருமைப் பெற்று பெருமையும் அழகும் பொருந்திய தோள்களை உடையவனும், நாபிக் கமலம் உடையனுமான எம்பெருமானுடைய கையில் வலப்பக்கத்திலுள்ள திருவாழி யாழ்வானைப் போல் ஒளி மல்கி இடப்பக்கத்திலுள்ள பாஞ்சஜஞாழ்வானைப் போல் நிலை நின்று முழங்கி, ஸ்ரீ சார்ங்கத்தாலே தள்ளப் பட்ட பானவர்ஷம்போல், உலகத்தார் அனைவரும் வாழும்படியாகவும் கன்னபிராநோட்ட கலவிக்கு நோன்பது நோற்கிற நாங்களும் சந்தோஷித்து மார்கழி நீராட்டம் செய்யும்படியாகவும் இவ்வுலகத்தில் தாமதம் செய்யாமல் மழைப் பொழிவாயாக!


அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)

------------

Song 4:

In the last pAsuram, AnDAL wished there be prosperity in the world. Varuna, the demigod in charge of rain watches these events happening at ThiruvAipADi. Awestruck by the way his master, Sriman Narayana serving His fond gOpikAs, varuna thought, helping them by satisfying their desires is the easiest way he could please his Master. He approaches AnDAL, who was in the guise of a gOpikA and requests Her to command him.

A very interesting pAsuram by itself, it speaks how the demi gods comport with SrivaishnavAs. An excellent example quoted here is, the demigods like bhrahma, rudhra and indhira treat prapannAs at par how a heir apparent to a kingship is treated with respect and esteemed by all his ministers and subjects
When they treat prapannAs like that, its heights of ridicule and derision when SrivaishnavA's fall at their feet. More importantly such people cause their own downfall by loosing their chance to get salvation and hurt Sriman Narayana by doing so. Once when questioned, how do SrivaishnavAs behave with demigods, KoorathAzhwAn replied back saying, the question will sound correct if its rephrased as to how these demigods treat SrivaishnavAs. Such is the greatness of SrivaishnavAs that these demi gods feel great to be at their call and commands.

That being the essence of the song as such, AnDAL's instructions to varuna, goes to the extant of demanding him to consume the water from the middle of the sea, not leaving back a speck. Further She commands him to pour it all to its integrality without discriminating between the places where noble and bad people live. The sharp rain drops that resembles the powerful arrows shot by Sri Rama to shatter the asurAs to pieces, should bring happiness and prosperity to the entire world.

The most important aspect of being a Srivaishnava is to think about the welfare of everybody in the world, an exclusive attitude eluded on SrivaishnavAs.

"mArgazhi neerADa magizhndhu"

--
Madhusudhanan Kalaichelvan
Graduate Student,
Knowlton School of Architecture,
Ohio State University.

Tuesday, December 16, 2008

மார்கழி - முதல் திருநாள்

ஸ்ரீ:

Today - (16.12.2008)
மார்கழி முதல் நாள்

தமேவ மத்வா பரவாசு தேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹநீயம்
ப்ரபோதிகீம் யோக்ருதிசுக்தி மாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்த மீடே.

யாவரொரு அழ்வார் பூஜிக்கத்தக்கவராய் திருவரங்கத்தரவணையில் பள்ளிகொள்பவரான பெரியபெருமாளை ஸாக்ஷாத் பரவாசுதேவனாகவே பிரதிபத்தி செய்து, திருபள்ளியுணர்த்துமதான திவ்யப்ரபந்தத்தை அருளிச்செய்தரோ அப்படி பட்ட ஞானம் முதலிய குணங்கள் அமைந்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரை நான் வணங்குகின்றேன்.
மண்டங்குடிஎன்பர் மாமறையோர் மன்னியசீர்தொண்டரடிப்பொடி தொன்னகரம் வண்டுதிணர்தவயல் தெனரங்கதம்மானை பள்ளியுனர்த்தும் பிரானுதித்தவூர்

வண்டுகளானவை நெருங்கிப்படிந்திருகப்பட்ட கழனிகள் சூழ்ந்த அழகிய திருவரங்கத்தில் பள்ளி கொண்ட பெரிய பெருமாளை பள்ளி எழுப்புவதற்கு தொண்டரடிப்பொடி என்னும் திருநாமம் உடைய ஆழ்வார் திருமண்டன்குடி என்கின்ற ஊருக்குச் சொந்தமுடைய ஆழ்வார் பாடுகின்றார்

திருபள்ளியெழுச்சி

கதிரவன் குணதிசை சிகரம் வந்தணைந்தான்

கன இருள் அகன்றது காளையம் பொழுதாய்

மது விருந்தொழுகின மாமலரெல்லாம்

வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி

எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

இருங்களித்தீட்டமும் பிடியொடும் முரசும்

அதிர் தலில் அலைக் கடல் போன்றுள தெங்கும்

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!



-தொண்டரடிப்பொடி ஆழ்வார்



கதிரவன் - சூரியன்

குணதிசை - கீழ் திசை

வானவர் அரசர் - தேவர்கள்

எதிர் திசை - தெற்கு திசை

களிறு - ஆண் யானை

பிடி - பெண் யானை

முரசு - வாத்தியம்



இத்திருப்பள்ளிஎழுச்சியின் உரை





அரங்கராஜனே, சூரியனானவன் கிழக்கு திக்கில் உதித்துவிட்டான். இரவு பொழுதின் அடர்ந்த இருள் அகன்று காலைப் பொழு புலர்ந்து விட்டது. சிறந்த மலர்களெல்லாம் விகாசம் அடைந்துவிட்டது. தேவர்களும், அரசர்களும் திரண்டு உன் திருக்கண்கள் நோக்கிய தெற்கு திக்கில் கூடிவிட்டனர். ஆண் யானைகளும், பெண் யானைகளும், வாத்தியங்களும் சேர்ந்து ஒலிக்கின்ற போது அலைகளை உடைய கடலை ஒத்திருந்தது. எனவே இனியும் பள்ளியில் (சயனத்தில்) இருக்கலாகாது. நீ விரைவில் எழுந்து அருள்வாயாக.


திருப்பாவை

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நிராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்!
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே!! நமக்கே பறைத் தருவான்
பாரோர் புகழ படிந்தேலோர் எம் பாவாய்!

-ஆண்டாள்
திங்கள் - மாதம்
மதி - சந்திரன்
செங்கண் - செம்மை + கண்


இத்திருப்பவையின் உரை


செல்வம் நிறைந்த திருவைப்படியில் கைங்கர்ய சம்பத்தையும் இளம் பருவத்தையும் உடைய பெண்காள்! விலக்ஷணமான பூஷனங்களை அணிந்துகொள்பவர்களே! மாதங்களில் சிறந்த மாதமாகிய மார்கழி மாதமும், பூர்ண சந்திரோதயத்தை உடைய சுக்ல பக்ஷத்திய நன்னாளும் நமக்கு வாய்த்திருக்கின்றன; கண்ணனை கொடிய அரக்கர்களிடமிருந்து காக்க வேண்டி எப்பொழுதும் கூர்மையான வேல் ஏந்திய நந்தகோபன் மற்றும் அழகிய கண்கள் உடைய யசோதையின் சிங்கக்குட்டியாய் இருப்பவனும், நம்மைக் ரக்ஷிக்க வேண்டி ஒரு கண்ணை சந்திரனாகவும், அரக்கர்களை போக்க வேண்டி மற்றொரு கண்ணை சூரியனாக வைத்துக்கொண்டும் இருப்பவனான கிருஷ்ணனே சாக்ஷாத் நாராயணனின் அவதாரம்.(கிருஷ்ணன் என்று நேரடியாக சொன்னால் அடுத்த வீட்டு மாமி திட்டுவார் என்பதனால் பெருமாளை நோக்கி வேண்டுவதைப் போல் அண்டல் கண்ணனை வேண்டினாள்) அவனை சேவித்து நாமும் பயன் அடைவோம்; எனவே எல்லோரும் வாருங்கள், நிராடி வருவோம்!


அடியாள்
கிருஷ்ணப்ரியா
(namperumal_srirangam@yahoo.com)

INTRODUCTION:

Sri AndAL, as spoken by guruparamparA prabhAvams, is the incarnation of Sri Bhoomi Devi, one among the many Divine consort of Sriman Narayana.
Her avathAram, as Sri Manvaala Maamunigal says, "emmakkAgavandRO ingu AndAL avatharithAL", was to teach the greatness of saranAgathi and liberate us from the sufferings of this material world. The sweet songs that she sang, numbering 30, more popularly called as "ThiruppAvai" is believed to express the quintessence of Sri Vaishnava Sampradaayam as a whole. She herself declares that those who master these 30 with their meanings will be blessed with peace, prosperity and more importantly the causeless mercy of Sriman Narayanan.
The most special aspect of this prabandham can be understood by the way our poorvAchARyAs hailed it. They made it customary that all the 30 songs be chanted everyday at our homes and in temples. We might get to think that AndAL is actually trying to perform a religious ritual by conducting a vow to satisfy the Supreme Lord. But actually one should understand that all that she did is to pray to be granted the boon of "divine service, lasting to eternity", as she says,"iRRaikkum EzhEzh piRavikkum unthanIdu uRROmE yAvOm, unakkE nAm AtseivOm", Divine service at the lotus feet of Sriman Narayana, for all times to come, is the sole goal of all SrivaishnavAs and showing us the way to achieve that in short is what ThiruppAvai is all about.

SONG :1

The first song has been beautifully sung to mention about the core issues that are to be elaborated in the following songs.
She first sings the greatness of the wonderful day that got her a sambandham with EmperumAN. As AzhwAr sings, "anRu nAn piRandhilEn, piRandhapin marandhilEn"", its only after understanding the divine relationship between us and emperumAn, we are considered born. This divine relationship as expressed by Thirumanthram, is to be understood and the day when this happens, is to be celebrated. AndAL understood it on this very day and hence praises the day.
More next, she goes on to discuss what is that we are actually to do here. She emphasizes the fact that this body is as such to serve him, and the only prerequisite is that you have the interest to do it. Nothing else is a barricade, just the little interest and intention is what you need to qualify to serve Him.
She sees this interest glowing in the faces of Her friends as well and feels that the full bright moon is not only in the sky but also in their faces.
She then moves on to praise the prosperity of "thiruvAipAdi". The place is immensely prosperous with the pranks of Sri Krishna. Or in other words, the true wealth of vaishnavAs is the enjoyment that he gets from being close to God and serving Him.
The amount of care and concern that NandagOpar has for Sri Krishna amazes her so much that she sings about the sharp spear that he has to ward of silly insects that come near Krishna. The mangalAsAsana nishtai of NandagOpA, is similar to her own father Sri PeriyAzhwAr's. More importantly she feels, yasOdhA dEvi's constant watch on Krishna is responsible for His pranks.
Finally the most important idea to be learnt from this pAsuaram is discussed. That is, what is the means to attain Him?
The answer is very simple,
He is the sole means to attain Him.


--
Madhusudhanan Kalaichelvan
Graduate Student,
Knowlton School of Architecture,
Ohio State University.